கிளிநொச்சிக்கு பாடசாலை அபிவிருத்தி பெயரில் 7.5மில்லியன் நிதி!

தென்கொரியாவின் கொய்கா அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கல்வி அமைச்சிற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.இந்த நிதியானது முழுமையாக கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை அபிவிருத்திக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளையும் அதன் வளங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், எஸ்.ஸ்ரீதரன் கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பணிப்பாளர் சு.முரளிதரன், உட்பட தென்கொரிய நாட்டின் கொய்கா நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதன்படி பளை, கண்டாவலை, கராச்சி, பூநகரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலை,

பிரமந்தநாறு மகா வித்தியாலயம், இயக்கச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, முழங்காவில் ஆரம்ப வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும் மாதிரி பாடசாலைகளாகவும், சென்.தெரேசா பெண்கள் கல்லூரி, கணகாம்பிகை குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சிவாபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இராமநாதபுரம் (கிழக்கு) அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பளை இந்து ஆரம்ப பாடசாலை, சோரன்பட்டு இலங்கை கிறிஸ்தவ தமிழ் கலவன் பாடசாலை, முக்கம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,

கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இரணைதீவு ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை ஆகிய ஒன்பது பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இந்த அபிவிருத்தியில் பாடசாலை கட்டிடங்கள், விசேட தேவை உடையோருக்கான வகுப்பு உபகரணங்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்வி பணிப்பாளர்கள் ஆகியோருக்கான வெளிநாட்டு உள்நாட்டு பயிற்சிகள், மாணர்களுக்காள தொழில் வழிகாட்டல், கணணி தொழில்நுட்பம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு கல்வி இயல் அளவை மேம்படுத்தும் செயல் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் மிக விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.