பூச்செடி போன்று கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

பூ செடிக்கு பதிலாக சஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தெகநபர் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகக்லை தோட்ட பகுதியில் வீடொன்றில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் பூச்செடி வளர்க்கும் சாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். 

சுமார் இரண்டு அடி உயரமான கஞ்சா செடிகள் மூன்றை இன்று (01) மதியம் பொலிஸார் மீட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தலவாக்கலை பொலிஸாரினால் சுற்றவளைப்பு செய்யப்பட்ட போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 
Powered by Blogger.