நவம்பர் மாதம் ஆறு மாகாணசபைகளுக்கு தேர்தல்!

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறு மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் ஒன்றுக்கு ஆயத்தமாகுமாறு சகல கட்சிகளுக்கும் தாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 எவ்வாறெனினும், அனைத்து மாகாணசபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு சில கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

 சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் பதவிக் காலம் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மத்திய, வடமேல் மற்றும் வட மாகாண சபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.

 இதன்படி, ஆறு மாகாணசபைகளின் தேர்தல்களையும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதுPowered by Blogger.