கொழும்பு நகரில் மத்தியதர வர்க்க மக்களுக்காக வீட்டு தொகுதி !

கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் மத்தியதர வர்க்க மக்களுக்காக வீட்டு தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

 மாளிகாவத்தை வீட்டு தொகுதி போன்ற 10 மடங்கு பெரிய புதிய 5 உப நகரங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மாநகர நகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 தெமட்டகொட, ஹேனமுல்ல, மாளிகாவத்தை, கொல்லன்னாவை, கிருலப்பனை பிரதேசத்தில் இந்த உப நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 கொழும்பு நகரத்தில் வீட்டுத் தொகுதியை நிர்மாணிக்கவும், பத்தரமுல்லையில் மூன்று புதிய நிர்வாக கட்டட தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக 37000 மில்லியன் செலவிடப்படவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 அதற்கமைய பத்தரமுல்லை செத்சிரிபாய இலக்கம் 3 இல் கட்டடத்தொகுதிகள் உட்பட புதிய 3 கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்ற நிலையில் அதற்காக 25000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.