புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு ஈழத்தில் இருந்து ஓர் மடல்.!

அன்புக்கும் மதிப்பிற்கும் மேலான 
புலம்பெயர் உறவுகளுக்கு 
எனது முதற்கண் வணக்கம். அன்பார்ந்த எனது சொந்தங்களே. கடந்த ஒன்பது வருடமாக எமது ஈழ உறவுகள் சொந்த மண்ணிலோ சூறையாடப்பட்ட அவல தினத்தை பூர்த்தி செய்துள்ளோம்.

இருந்தும் வருடத்திற்கு வருடம் ஏதோ ஒரு பிரச்சனை தோன்றியவண்ணம்  உள்ளதனை நாம் நன்கு அறிவோம். இந்தவருடம் நடந்த நிகழ்வில் ஒரு புரளி கிழம்பியிருக்கின்றது அது இனத்தோசத்தை தூண்டும் விதமாக அமைந்ததனை நாம் நன்கு அறிவோம். அதாவது ( முன்னாள் போராளி வடிவேல் சசிதரன் )எனும் முகநூல் பக்கத்தில் தனது ஆக்கிறோசமான கானொளியினை பதிவேற்றியிருந்தார் அது தொடர்பாக தங்களுக்கான பதிலினை ஈழத்தில் இருந்து இவ் மடலின் ஊடாக எனது பதிலினை தங்களுக் முன்வைக்கின்றேன்.!

 எமது இரத்தத்தின் தமிழால் உறவாகி தமிழன் எனும் நாமத்தை பறைசாற்றி தமிழீழம் எனும் தேசத்தை நேக்கி பயணித் போராடியவர்களில் நானும் ஒருவன் ஆகையால் மேல் குறிப்பிட்டுள்ள நபரின் பதிலினை அல்லது கருத்தினை என்னால் ஏற்க முடியவில்லை. காரணம் ஒரு போராளி என அவர் தனது பதிவில் கூறுகின்றார்  அவர் ஒரு போராளியா என கேக்கும் அழவிற்கு அவரது ஒழுக்கம் உள்ளது ஒன்று இரண்டு ஒரு போராளி இறக்கின்ற போதே அவன் ஒரு உன்மையான போராளி என்னையும் சேர்த்து என என்னை நல்வழி வழர்த்த தலைவர் அண்ண கூறியதனை நான் எனது ஆயூள் காலம்வரை மறக்க மாட்டேன மறக்கவும் இயலாது.

அவர் ஒரு போராளி என விவாதிக்கின்றார் அதனை நான் விமர்சிக்கவில்லை மேல் நான் கூறியதற்கு இணங்க அவர் எவ்வகையான போராளி என போராளிகள் கட்சி என கூறுவோரும் பதில் சொல்லட்டும் உன்மையில் அண்ண வழி நின்றுருந்தால். ஆகையால் புலம்பெயர்ந்துவாழும் எனது  உயிரிலும் மேலான சொந்தங்களே இதனை உங்களிடமே விடுகின்றேன்.

அங்கு எத்தனை அமைப்புக்கள் எத்தனை தலைமைகள் எத்தனை பிரிவுகள் என்பதனை சில உறவுகள் மூலம் அறிய முடிகின்றது ஆனால் ஈழத்தில் எத்தனை போராளி கட்சிகள் உங்களால் உணர முடிகின்றதா.? அவர்கள் யார்? எவ்வாறு இங்கு இயங்குகின்றார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என வினாவினால் அதற்குள் இருக்கும் பதில் உங்களை ஆழ்பரிக்கும் என்பது எனது தயவான வேண்டுகோளாக உங்கள் நலன் கருதி முன்வைக்கின்றேன்.!

நீங்கள் அங்கு இருந்து கொண்டு எமது உறவுகளுக்காக செய்யும் உதவியினை அழவிடலாகாது. அதைவிட நீங்கள் ஒன்றை விழங்கிக்கொள்ளவேண்டும். மேல் குறிப்பிட்ட நபர் யார் என இப்போது பாருங்கள். அவர் ஒரு போராளி கருணா பிரிந்தவுடன் வீட்ட சென்றுவிட்டார் அதன் பின் துரோகி கருணா அவர்களால் வார்த்தைகளால் வடிக்க முடியாத சித்திரவதைகளை செய்து நாக்கறுக்கப்பட்டு கொடுரமாக கொல்லப்பட்ட போராளி லெப் கேணல் நீலன். இவரது புனிதமான ஒரு போராளியின் பெயரினை கொண்டு புலம்பெயர் உறவுகளிடம் நிதி வாங்கி தனது சுயலாப அபிலாசைகளை முன்னெடுக்கின்றார் மேல் குறிப்பிட்ட நபர்.

உறவுகளே மழை நின்றுவிட்டது சாரல் அடித்துக்கொண்டுதான் உள்ளது. ஆகையால் யாருக்கு உதவி செய்யவேண்டும் அவை யாரூடாக செய்யவேண்டும் என நன்கு ஊகித்து செயற்படுங்கள் அதுமட்டும் மின்றி இங்கு போராட்டத்தையும் போராடியவர்களையும் வைத்து பிழைப்புத்தேடும் புறம்போக்கர்களுக்கு  உணர்வுகளை கூறயவுடன் உங்களது கை நீழுகின்றது அதற்காக எல்லோரையும் நான் கூறவில்லை உரியவர்கள் நங்களுக்கு பொருத்தமானவற்றை எடுத்து கொள்ளுங்கள்.

மே 18 அன்று கிழக்கில் இருந்து பேருந்துகள் செல்வதற்கு பணம் கொடுத்து வடக்குக்கு அனுப்பியது யார்? அதேன் இந்த சசிதரன்னிடம் அவ் பொறுப்பு வழங்கப்பட்டது? மே நிகழ்விற்கும் இவர்ருக்கும் என்ன சம்மதம்?  இவை அனைத்துக்கும் புலம்பெயர் உறவுகள் பதில் தேடுங்கள்.!

 அன்று  என்ன நடந்தது? சசிதரன் தலமையில் கிழக்கில் இருந்து சென்ற பேருந்தில் இருந்த மக்கள் ஏதும் அறியாத உறவுகள் தங்கள் முள்ளி மண்ணில் பறிகொடுத்த தங்களது உறவுகளுக்கு ஒரு சுடர் ஏற்ற சென்றார்கள் தவிர அங்கு இனத்தோசம் பேச செல்லவில்லை. இது உன்மை கரணம் ஒரு மாவீரரது அன்னையும் அங்கு சென்றிருந்தார் அவருடைய விபரங்கள் இங்கு குறிப்பிட இயலாது.


நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் இந்த மக்களை இவர் அழைத்து செல்லவில்லை மாறாக நாங்கள் எங்குதான் சுடர் ஏற்றுவோம் அங்கு ஏற்றமுடியாது என கூற மாணவர்கள் நாம் பிரித்து செய்யும் நிகழ்வு இவை கிடையாது ஆகையால் எங்கு தவிர்த்து ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் உகங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என கூறவே பிரிவினவாதம் எனும் சொற்பதத்தினை இவர் முன்வைத்து மக்களையும் சீண்டி தனது குள்ள நரி விளையாட்டை இனிதே  முடித்துவிட்டு துதிபாடும் இவருக்கும் இந்த நீலன் அணி என ஒரு புனிதமான மாவீரனது பெயரினை கொச்சப்படுத்தும் இவர்களுக்கு நீங்கள் செய்யப்போகும் உதவி என்ன???

ஒழிவு மறைவான உறவுகளிடம் ஏன் நாம் ஏமார்ருகின்றோம் உன்னையாக அற்பணிப்போடு செயற்படும் உறவுகளுக்கு பல கல்லெறிகள் விழும் கயவரோடு துதிபாடும் இவர்களுக்கு பல காசி மாலைகள்

 விழும் சிந்தியுங்கள் எஞ்சியுள்ள எம் உறவாவது விதவையின்றி வாழ, எஞ்சியுள்ள மழழையாவது அனாதையின்றி வாழ, வீர பேச்சுக்களை நம்பி விரோதிகளிடம் காசனும் பாசக்கயிறினை எறியாதீர்கள் .!

என்றும் உன்மையுள்ள நினைவில் போராடிய போராளி
தமிழ் அருள் இணையத்திக்கான மட்/ பூவேந்தன்.
Powered by Blogger.