கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடப்படும் திட்டம்!

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் புதிய மாணவர்கள் மீது சிரேஷ்ட


மருத்துவபீட மாணவர் சங்கத்திற்கும் பீடாதிபதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று மட்டு.போதனா வைத்தியசாலை கேட்பேர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பகிடிவதையால் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்காலத்தில் பகிடிவதையை எவ்வாறு நிறத்துவது போன்ற பல கருத்துக்களை பீடாதிபதிகள் மாணவர்களுக்கு முன்வைக்கப்பட்ட போதும் உரிய தீர்வ எட்டப்படாத நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

குறித்த மருத்துவ பீடத்திற்கு முதலாம் ஆண்டிற்கு புதிய மாணவர்கள் சேர்ந்துள்ள போது அவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை செய்துவந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலரும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் பலர் முறைப்பாடுகளை செய்தனர்.

இதனையடுத்து புதிய மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்ட 5 சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதத்திற்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் குறித்த பீடம் மூடப்பட்டுள்ளதையடுத்து மாணவர் சங்கத்தினருக்கும் மருத்துவ பீடாதிபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டுவரும் பகிடிவதையை கைவிடுவதாக உத்தரவாதம் வழங்கப்படும் வரை குறித்த பீடம் தொடர்ந்து மூடப்படும் என மருத்துவ பீடாதிபதி அருள்பிரகாசம் அஞ்சலா தெரிவித்தார்.
Powered by Blogger.