ஹம்பாந்தோட்டையில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்!

இன்புளுவன்ஸா தொற்றுக்கு இணையான நோய்த் தொற்று அறிகுறியைக் கொண்ட காய்ச்சல், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தற்போது வேகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

 ஹம்பாந்தோட்டை மாவட்ட தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவர் எம்.என்.எச்.கிரிஷாந்த எமது செய்திச் சேவையிடம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

 தடிமன், காய்ச்சல் மற்றும் தொண்டையில் கோளாறு என்பன இந்த நோயின் அறிகுறிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய்தாக்கமுடையோர், இருமல், பினிசம் முதலான தாக்கங்களைக் கொண்டோர் இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலைமை இருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.