வங்கியில் கொள்ளையிட வந்தவர் சிக்கினார்!

வத்தளை - எலகந்த பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் கொள்ளையிட வந்த நபரொருவரை அவ்வங்கியின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாடிக்கையாளர் இணைந்து பிடித்துள்ளனர்.

 நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த வங்கியில் நுழைந்த கொள்ளையர் அங்கிருந்த வங்கி காசாளரின் முகத்தில் மிளகாய் தூளை தூவி கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

 இதன்போது , உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாடிக்கையாளர்கள் இணைந்து குறித்த கொள்ளையரை பிடித்து காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த சந்தேகநபர் ஒரு கோடியே 10 இலட்சத்து 82 ஆயிரத்து 160 ரூபாவினை இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 பின்னர் கொள்ளையரிடம் இருந்து பணத்தொகை காவற்துறையினர் பொறுப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  30 வயதுடைய ருக்கஹவில பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேகநபர் இன்றைய தினம் வத்தளை நீதவான் நீதிமன்றில முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் , வத்தளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.