அரசியலில் பெண்களை ஈடுபடுத்த புதிய சட்டம்!

பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வது நாட்டின் பொருளாதாரத்தை
உயர்த்தும் என ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே குறிப்பிட்டார்.465 உறுப்பினர்களைக் கொண்ட அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழவையில் 47 பேர் மட்டுமே பெண்கள்.

ஜப்பானிய நாடாளுமன்றம் பெண்களை அதிகமாக அரசியல் துறையில் ஈடுபடுத்துவதற்கான புதிய சட்டத்தை இன்று நிறைவேற்றியது.

அந்தச் சட்டத்தின்படி, தேர்தலில் ஆண் வேட்பாளர் எண்ணிக்கைக்குச் சமமாகப் பெண் வேட்பாளர்களைக் களமிறக்குமாறு ஜப்பானின் அரசியல் கட்சிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஜப்பானிய நாடாளுமன்றத்தில் பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர்.அந்த வேறுபாட்டை நீக்கவே இந்த முயற்சி.

சட்டத்தை மீறினாலும் எந்தத் தண்டனையும் இல்லை, அதைப் பின்பற்றினாலும் எந்தச் சலுகையும் இல்லை என ஜப்பானிய நாடாளுமன்றம் தெரிவித்தது.ஜப்பானில் அடுத்த அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
Powered by Blogger.