நீர்வேலியில் சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவர் விபத்தை ஏற்படுத்தி பெண் படுகாயம்!

நீர்வேலி, வில்லுமதவடியில்  இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்தார்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடமைபுரியும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் அடையாள அட்டை உட்பட  ஆவணங்கள் எதுவும்  அற்ற சிறுவன் ஒருவனே விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் கோப்பாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

No comments

Powered by Blogger.