த.தே.ம.முன்னணி மாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்கிறது!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை தமது கட்சி எதிர்கொள்ளாது என்பதை முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து சூசகமாக அறிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.

வடக்கு மாகாணசபையினருக்கும் யாழ்.பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் இடையிலான குழப்பகரமான நிலையின் தொடராக நேற்று ஊடகவியலாளர்களை முள்ளிவாய்க்காலில் கஜேந்திரன் சந்தித்து கருத்துத் தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மாகாணசபை முறையிமையினை தாங்கள் நிராகரிப்பதாகவும் அதனால் வடக்கு மாகாணசபை முன்னெடுக்கும் நிகழ்வில் பங்கேற்பதில்லை என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலோ அல்லது தனித்தோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்கொள்ளும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் வடக்கு மாகாணசபை நடத்தும் நினைவு நிகழ்வு ஒன்றிலேயே பங்கேற்கமுடியாது என அறிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மாகாணசபைத் தேர்தலை சந்திக்காது என்பதே வெளிப்படையாகியிருக்கிறது என்று தெரியவருகிறது. 
Powered by Blogger.