தமிழ் ராக்கர்ஸ்சுடன் என்ன தொடர்பு...?

நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால்... தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு வந்ததில் இருந்து, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என கூறி. நேற்று தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பாரதிராஜா, டி ராஜேந்தர், ராதாரவி, ரித்தீஷ் உள்ளிட்டோர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, சென்னை தியாகராய நகரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, திரையுலகினர், போராட்டத்துக்குப் பின் பல திரைப்படங்கள் வெளியாகாமல் காத்திருக்கும் போது, தான் நடித்த இரும்புத்திரை படத்தை, தயாரிப்பாளர் சங்கப் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி விஷால் வெளியிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் பைரசியை ஒழிக்க வேண்டும் என வைப்பு நிதியில் இருந்து 5 கோடி செலவு செய்துள்ள விஷால். தற்போது வரை தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது குறித்து தகவல் வெளியிடாததற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர்.
விஷால் அவர்களுடனான டீலை முடித்துக்கொண்டதுதான் இதற்கு காரணம் என்றும், இதன் பின்னணியில் லைக்கா நிறுவனம் உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின், குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள லைக்கா நிறுவனம். தமிழ் ராக்கர்ஸ்சுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளது. 
Powered by Blogger.