ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவரை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டுமுல்லை, பன்சலஹேன வீதியில் உள்ள வீடொன்றை சோதனை செய்த போதே இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அவர்களிடமிருந்து 503 கிராம் 540 மில்லிகிராம் ஹெரோயினும், 66 கிராம் 56 மில்லிகிராம் கொக்கேனும், அய்ஸ் என்ற போதைப்பொருள் 2 கிராம் 90 மில்லிகிராமும், 42 டான்சின் மாத்திரைகளும், 10 கையடக்க தொலைபேசிகளும் மற்றும் 74,750 ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் 86 இலட்சத்து 28,000ற்கும் அதிகமாக பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட பெண் உட்பட மூவரும் மீதொட்டுமுல்லை மற்றும் நாகலகம் வீதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேகநபர்கள் இன்று (10) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Powered by Blogger.