வவுனியா விபத்தில் ஒருவர் மரணம்!

வவுனியா,  தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவரொருவர் உயிரிழந்துள்ளார்
60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே உயிரிழந்தவராவார்.
வவுனியாவிலிருந்து தாண்டிக்குளத்திற்கு துவிச்சக்கரவண்டியில்  சன்ற வயோதிபரை கன்டர் ரக வாகனமொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கன்ரர் வாகனத்தையும் சாரதியையும் பொலிஸார் கைது செய்தனர்.
வயோதிபரின் சடலம் தற்போது வவுனியா பொது மருத்துவமனையில வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
Powered by Blogger.