அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்  அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 மில்லியன் பணமோசடி செய்த குற்றத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதனையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரது இடத்துக்கு அநுருத்த பொல்கம்பொல நியமனம் பெற்றார். பின்னரும், இவர் தொடர்பிலும் விமர்ஷனங்கள் அதிகரித்ததனால் இவரையும் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
Powered by Blogger.