அநாதரவான கப்பலில் இருந்த பொருட்களை எடுத்தவர்கள் கைது!

மயி­லிட்டிக் கடற் பிர­தே­சத்­தில் அநா­த­ர­வாக நீண்ட நாள்­க­ளா­கக் காணப்­ப­டும் கப்­ப­லி­லிருந்து பொருள்­களை எடுத்­தார்­கள் என்ற குற்­றச்­சாட்­டில் ஆவ­ரங்­கா­லைச் சேர்ந்த 5 பேர் காங்­கே­சன்­துறை சிறப்­புக் குற்­றப் பிரிவுப் பொலி­ஸா­ரி­னால் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­ட­னர்.

 மயி­லிட்­டிக் கடற்­க­ரை­யைப் பார்­வை­யிட இளை­ஞர் குழு சென்­றுள்­ளது. அந்­தக் கடற்­ப­ரப்­பில் அநா­த­ரவாக நிற்­கும் கப்­ப­லை­யும் சென்று பார்­வை­யிட்­டுள்­ள­னர். கப்­ப­லில் உள்ள ஒரு வகை­யான பொருள்­களை எடுத்து அழுத்­திப் பார்த்­துள்­ள­னர். அது ஆகா­யத்­தில் சென்று பிர­கா­ச­மாக வெடித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து, அதே­போன்று கப்­ப­லில் காணப்­பட்ட பொருள்­களை எடுத்­துக் கொண்டு அந்த இளை­ஞர் குழு சென்­றுள்­ளது.

 இத­னைக் கண்­ணுற்ற சிலர் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­யுள்­ள­னர். பொலி­ஸார், முச்­சக்­கர வண்­டி­யில் சென்ற இளை­ஞர்­களை மடக்கி கைது செய்­த­னர்.
Powered by Blogger.