புதிய அர­ச­மைப்பு வரைவு தொடர்பாக நிபு­ணர் குழு­ கூட்­டத்­தில் இன்று ஆரா­ய்வு!

புதிய அர­ச­மைப்­புக்­கான வரைவு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வழி­ந­டத்­தல் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கும் 10 பேர் கொண்ட நிபு­ணர் குழு­வின் இன்­றைய கூட்­டத்­தில் இந்த வரைவு முன்­வைக்­கப்­பட்டு ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இன்று இறு­தி­யாக்­கப்­ப­டும் வரைவு எதிர்­வ­ரும் வியா­ழக் கிழமை கூட­வுள்ள வழி­ந­டத்­தல் குழு­வுக்­குச் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு தயா­ரித்த இடைக்­கால அறிக்கை, அர­ச­மைப்பு நிர்­ண­ய­ச­பை­யாக மாற்­றப்­பட்ட நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்­டது. டிசெம்­பர் மாதத்­தில் இதன் விவா­தம் முடி­வுற்­றது. நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­களை உள்­ள­டக்கி அர­ச­மைப்­புக்­கான வரைவு தயா­ரிக்­கும் பணி­கள் கடந்த ஜன­வரி மாதம், நிபு­ணர் குழு­வி­னால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லைத் தொடர்ந்து இந்த நட­வ­டிக்­கை­யும் கிடப்­பில் போடப்­பட்­டது. இந்த நிலை­யில் கடந்த சில வாரங்­க­ளாக, நிபு­ணர் குழு­வின் சில உறுப்­பி­னர்­கள் இந்த வரை­வைத் தயா­ரிக்­கும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­த­னர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.