ஜெ. கை அசைக்கவில்லை – பொய் சொல்கிறாரா சசிகலா!

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது மரணம் குறித்த மர்மங்களை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அதன்படி பிரணாப் பத்திரத்தில் சசிகலா ஆளுநர் வருகையையொட்டி அவருக்கு ஜெயலலிதா கையசைத்தார் என ஆணையத்திடம் கூறியிருந்தார்.
இன்று விசாரணைக்குழுவின் முன்பு ஆஜரான பிஸியோதெரபி மருத்துவர் சிவக்குமார் கொடுத்த வாக்குமூலத்தில் ஜெயலலிதா ஆளுநர் வந்திருந்த போது அவரை நோக்கி  கை அசைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
நீதிபதி ஆறுமுக சாமி ஆணையத்திடம் முன்னுக்குப் பின் முரணான  பொய் தகவலையும் சசிகலாவும் அவர்களை சார்ந்தவர்களும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.