வண்டலூர் மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்கள் புதிய அறிவிப்பு ?

வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் வார விடுமுறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் இம்மாத இறுதி வரை செவ்வாய் கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் பூங்காக்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. தனியார் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு முடிந்து விட்டதால் கோடை விடுமுறையை கொண்டாட மாணவ-மாணவிகள் தயாராகி விட்டனர்.
ந்த ஊர்களுக்கும், கோடை வாசஸ்தலங்களுக்கும் செல்ல பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கோடையில் அனைத்து ரெயில்களும், அரசு பஸ்களும் நிரம்பிவிட்டது.
இந்நிலையில், சென்னையில் கோடை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை இந்த மாதம் அனைத்து நாள்களும் திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த மாதம் அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் திறந்து இருக்கும். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையும் பூங்காவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கிண்டி சிறுவர் பூங்காவும் இம்மாதம் அனைத்து நாட்களிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Powered by Blogger.