கண்டி வன்முறையின் பிரதான சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கண்டி மாவட்டத்தில், மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேரின் விளக்கமிறியலும், எதிர்வரும் 14 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும், தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.பரீக்டீன் முன்னிலையில் இன்று (02) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன்போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
இதேவேளை, இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களின் உறவினர்கள், நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர்.
Powered by Blogger.