மீதொட்டமுல்லை அனர்த்தத்துக்கு கொழும்பு மாநகர சபையே பொறுப்பு!

மீதொட்டமுல்லை குப்பைமேடு சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு கொழும்பு மாநகர சபையே பொறுப்புக்கூற வேண்டுமென கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், மீதொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில், 32 பேர் உயிரிழந்ததோடு, பொதுமக்களின் சொத்துகளுக்கும் பாரிய சேதங்களும் ஏற்பட்டன.

கொழும்பு மாநகர சபை, குப்பைகளை மீள்சுழற்சிக்கு உட்டுபடுத்தும் செயற்பாடுகளை சரியான முறையில், முன்னெடுக்காமையே இந்த அனர்த்தத்திற்கு காரணமென கணக்காய்வாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஞ்ஞான அடிப்படையில் நட்டஈடு சரியான முறையில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெற்ற பின்னர்கூட அந்த இடத்திலிருந்து குப்பையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்லை குப்பையை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கு முறையான செயற்றிட்டம் ஒன்றை கூடிய விரைவில் செயற்படுத்துமாறு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம், கொழும்பு மாநகர சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

Powered by Blogger.