கோப் குழுவை உடன் கலைக்கவும் !

தற்போதைய குழுவிலுள்ளவர்கள் பணம் பெற்றுக்கொண்டவர்களே எனவே கோப் குழுவை உடனடியாக கலைக்க வேண்டுமென சபாநாயகருக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பொரளை என். எம் . பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் ;
பாராளுமன்றத்தில் முழுமையான பலம் கொண்ட குழுவாக கோப்குழு செயற்படும். கடந்த பாராளுமன்றம் கூடிய போது மகிந்தானந்த சபாநாயகரிடம் பிணைமுறி மோசடி தொடர்பாக அதற்கு சார்பாக செயற்படும் அனைவரையும் கோப் குழுவிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனக் கோரினார். அவர்களுக்கு அக்குழுவில் இடமளிக்க கூடாதெனவும் கோரினார்.
ஆகவே இவ்வாறான கோப்குழுவில் தெரிவு செய்தால் எவ்வித நன்மையும் கிடைக்கப்பெற போவதில்லை ஆனால் அது தொடர்பில் சபாநாயகர் எவ்வித செயற்பாடும் எடுக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இதன் மூலம் பயன் பெறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் பணத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கும் உள்ளது.
அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும் போது தற்போதைய கோப் குழு தொடர்ந்து செயற்படும். கோப் குழுவின் முதன்மை செயற்பாடு பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை செய்வது காணப்படும். எனவே தற்போதுள்ள கோப் குழுவில் அனைவரும் பிணைமுறி மோசடிக்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டவர்கள். தொலைபேசி மூலமாக கலந்துரையாடிக்கொள்பவர்களே கோப் குழுவில் உள்ளனர். பிணைமுறி மோசடி தொடர்பாக குரல் எழுப்ப எவரும் இல்லை.
ஆகவே தற்போதைய கோப் குழுவை உடனடியாக சபாநாயகர் கலைக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் நம்பிக்கை பெற முடியாது. கோப் குழு சில வேளைகளில் நீதிமன்றமாக செயற்படும் அவ்வாறு இருக்கும் கோப் குழு தற்போதையவர்களால் எவ்வாறு மோசடிக்காரர்களை கண்டுபிடிக்கமுடியும்.
பணம் பெற்றுக் கொண்டவர்கள் இருக்கும் வரை மக்களின் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இக்கோப் குழு செயற்படும் என்பதில் நம்பிக்கையில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
Powered by Blogger.