எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் இடம்பெற்றது. 

இவ் ஓப்பந்தமானது, உலகின் மிகப்பெரிய எரிபொருள் சேவை வழங்கும் நிறுவனமான ஸ்க்லம்பர் நிறுவனத்தின் உபநிறுவனமான ஈஸ்டன் எக்கோ டி.எப்.சீசீ நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. 

இலங்கை அரசு சார்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளார். 

இந்நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர், 

´இந்த உடன்படிக்கையானது எதிர்காலத்தில் எமது நாட்டிற்கு அதிக நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த திட்டமானது நீண்டகாலத்தை எடுத்தது. ஆனால் இன்று சாத்தியமானதால் எமக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும். 

இந் ஓப்பந்தம் பத்துவருடத்துக்கு உட்டபட்டதாகும். நாங்கள் எதிர்பார்ப்பது இந்த நிறுவனத்தில் இருந்து நிபந்தனையின் கீழான பல்துறை சேவைகளையேயாகும். நாங்கள் இந்த ஒப்பந்தம் செய்ய பல பேச்சுவார்த்தைகளின் பின்பே தீர்மானித்தோம். 

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக நாம் முன்னோக்கி செல்லலாம். இந்நிறுவனம் ஆய்வுப் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட எதிர்பார்த்துள்ளது. ஆய்வுப்பணிகள் மூலம் பெறப்படும் அனைத்து தரவுகளும் அரசுக்கே சொந்தமாகும். 

எமது அமைச்சும் அரசும் ஒவ்வொரு தகவல்களுக்கும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும். நாங்கள் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே இந்த ஒப்பந்தத்திற்கு வந்தோம்.´ என்றார் அமைச்சர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.