விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதி!

சிலாபம் - கொழும்பு வீதியில் வாய்க்கால் பிரதேசத்தில் நபர் ஒருவரை மோதிவிட்டு வாகனத்துடன் தப்பிச் சென்ற வாகன சாரதியை கைது செய்வதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இன்று அதிகாலை 02.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், உயிரிழந்தவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என்றும் வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய ஒருவராக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் தற்போது லுனுவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளன. 

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தையும் சாரதியையும் கைது செய்வதற்காக வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Powered by Blogger.