போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

சாதாரண, தற்காலிக மற்றும் ஒப்பந்தம் அடிப்படையிலான
புகையிரத பணியாளர்கள் இன்று (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சேவைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. 

இது சம்பந்தமாக போக்குவரத்து அமைச்சு புகையிரத திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார். 

நேற்று முன் தினம் (29) 04.00 மணி முதல் புகையிரத தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் இன்று (31) மாலை 04.00 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் இன்று நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாதாரண, தற்காலிக மற்றும் ஒப்பந்தம் அடிப்படையிலான ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.