புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட பெண் கைது!

அரலகங்வில, ஜயமுதுகம பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அரலகங்வில பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது தோட்டம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்கள் அரலகங்வில, ஜயமுதுகம மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
Powered by Blogger.