விமானப் படை வீரர் தூக்கில் தொங்கி தற்கொலை!

றத்மலானை, விமானப் படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அந்த முகாமின் படையினர் தங்கும் வீட்டில் வைத்து அவர் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அம்பாறை, பரகஹகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Powered by Blogger.