களனியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்!

களனியாற்றில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளதாக
கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதைக்கு பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான நதிகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இதன் காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் களனி ஆறும் தற்போதைக்கு உச்ச கொள்ளளவை விட அதிக நீர்வரத்து காரணமாக வௌ்ளப் பெருக்கை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடுவலை, சீத்தாவக்க, கொலன்னாவை, ஹோமாகம பிரதேசங்களில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Powered by Blogger.