பொலிஸாருக்கு கையூட்டல் வழங்கியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கையூட்டல் வழங்கியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

 அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரிடமிருந்து சுமார் 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கையூட்டல் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்து.

 இது தொடர்பில் வார இறுதி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கையூட்டல் பெற்றுக்கொள்ளவும் இல்லை தாம் கையூட்டல் வழங்கவும் இல்லை என நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

 கையூட்டல் தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

 முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கூடைப்பந்தாட்டம், ரகர் போன்ற விளையாட்டுக்களுக்கு தமது நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பிலான எழுத்து மூல கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் தம்மிடம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டமை அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Powered by Blogger.