மட்டு.பண்ணையாளர் புதிய இயந்திர கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு - பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

 கேதீஸ்வரன் என்ற பண்ணையாளரே புல் வெட்டும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.  தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொடுப்பதற்காக இயந்திரம் ஒன்றைப் பெறுவதற்காக பல இடங்களிலும் தேடி அலைந்துள்ளார்.

இறுதியில் அது கிடைக்காத நிலையில் தனது முயற்சியினால் இந்த இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளதாக பண்ணையாளர் கூறியுள்ளார்.

 இதேவேளை, எனது முயற்சி எனக்கு வெற்றியளித்தமை மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்துள்ளார் . எதிர்காலத்தில் இன்னும் சில இயந்திரங்களைக் கண்டுபிடிக்கலாம் என்றும் பண்ணையாளரான கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், பண்ணையாளரின் புதிய இயந்திர கண்டுபிடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 
Powered by Blogger.