வவுனியாவில் குரங்குகள் அட்டகாசம்!

வவுனியா சிறைச்சாலையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய  கைபேசியை குரங்கு ஒன்று எடுத்துக் கொண்டு ஓடி அதனை சேதப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 நேற்று காலை சிறைக்குவரும் பொதுமக்களின் விபரங்களை பதிவு மேற்கொள்ளும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய கைபேசியை  எடுத்துக்கொண்டு ஓடிய குரங்கை பின் தொடர்ந்த  குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்.

 குறித்த கைபேசியை மரத்திலிருந்த குரங்கிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக கல் ஒன்றினை குரங்கினை நோக்கி எறிந்தபோது குரங்கு கைபேசியின் கவரினை கீழே போட்டுள்ளது மீண்டும் ஒரு கல்லினை எறிந்தபோது பற்றறியை கீழே போட்டது இதையடுத்து வாழைப்பழம் ஒன்றினை குரங்கை நோக்கி வீசியபோது கைபேசியை கீழே போட்டு விட்டு வாழைப்பழத்தைப் பெற்றுக்கொண்டு குரங்கு சென்றுவிட்டதா தெரிவித்துள்ளனர்.

மரத்திலிருந்து கீழே வீழ்ந்த கைபேசியானது கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் பாவனை செய்ய முடியாத நிலையிலுள்ளது.  இவ்வாறு குரங்குகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

  இதனைக்கட்டுப்படுத்தவதற்கு பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும் நடைமுறைப்படுத்த முடிவதில்லை இதனால் பல இழப்புக்களையும் சந்திக்க நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.