இன்று விக்கி - மாணவ பிரதிநிதிகள் சந்திப்பு!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினருக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.

 முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற உள்ளதாக முதலமைச்சர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் அண்மைய நாட்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 எனினும், வட மாகாண சபையினால் நடத்தப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்திருந்தார்.

 எனினும், குறித்த விடயம் தொடர்பில் இரு தரப்பினரிடமும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் இறுதி முடிவை மேற்கொள்ள இன்று இரு தரப்பினரும் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.