மாண­வர்­க­ளின் உணர்வை மதிக்­காத மாகாண சபை­யி­ன­ருக்கு காலம் பதில் சொல்­லும்!

வடக்கு மாகாண சபை தம்மை வேண்­டு­மென்றே புற­க்கணிக்கிறது என்றும், இதற்குக் காலம் பதில் சொல்­லும் என்றும் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­ தலை­வர் கே.கிருஸ்­ண­மே­னன் தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண சபை­யி­ன­ருக்­கும், மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று முன்­தி­னம் மாலை சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது. அதன் தொடர்ச்­சி­யாக முள்­ளி­வாய்க்­கா­லில் நேற்று கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. வடக்கு மாகாண சபை­யி­ன­ரின் கலந்­து­ரை­யா­ட­லில் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர் பங்­கேற்­க­வில்லை.
இது தொடர்­பில் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத் தலை­வ­ர் கருத்து வெளியிடுகையில், “எமக்கு நேற்­றைய சந்­திப்­புக்­கான நேரம் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. நாம் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சில­ரைத் தொடர்பு கொண்டு நேரம் அறிய முற்­பட்­டோம். ஆனால் அவர்­கள் எமது அலை­பேசி அழைப்­புக்கு பதி­ல­ளிக்­க­வில்லை. அவர்­கள் தமது நிகழ்சி நிரலை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தி­லேயே குறி­யாக உள்­ள­னர். எம்மை உள்­வாங்­கும் நிலை­யில் அவர்­கள் இல்லை. நாம் மக்­க­ளு­டன் மக்­க­ளாக முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கலந்து கொள்­வோம். மாண­வர்­க­ளின் உணர்வை மதிக்­காத மாகாண சபை­யி­ன­ருக்கு காலம் பதில் சொல்­லும் என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.