தூத்­துக்­கு­டி­யில் தமி­ழர் படு­கொ­லையை கண்­டித்து – யாழில் போராட்­டம்!!

இந்­தி­யா­வின் தூத்­துக்­கு­டி­யில் தமி­ழக பொலி­ஸா­ரால் சுட்­டுக்­கொ­லை­செய்
­யப்­பட்ட தமிழ் உற­வு­க­ளுக்கு நீதி­வேண்­டி­யும், தமி­ழக பொலி­ஸா­ரின் கண்­மூ­டி­த்த­ன­மான தாக்­கு­தல்­க­ளைக் கண்­டித்­தும் நேற்­றுப் போராட்­டம் நடத்­தப்­பட்­டது.
யாழ்ப்­பா­ணம் மைய பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பாக போராட்டம் இடம்­பெற்­றது. தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி இதை ஏற்­பாடு செய்­தது.
“முள்­ளி­வாய்க்­கா­லின் வெறித்­த­னம் தூத்­துக்­கு­டி­யி­லுமா, ஈழத்தை போன்று தமி­ழ­கத்­தை­யும் ஆக்­காதே, பண­மு­த­லை­க­ளுக்கு தமி­ழன் பலிக்­க­டாவா, தமி­ழர்­க­ளின் உயிரை விட ஆலை அவ­சி­யமா “ போன்ற கோசங்­கள் எழுப்­பட்­டன. உயி­ரி­ழந்­த­வா்­க­ளுக்­காக மெழு­கு­வா்த்தி ஏற்றி அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.
இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் கருத்து தெரி­வித்த வண­பிதா ராஜ்­கு­மார் “அகிம்சை வழி­யி­லான ஜன­நா­யக ரீதி­யான எங்­கள் மக்­க­ளு­டைய போராட்­டம் நசுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த நாட்டு அரசு சொந்த இன மக்­க­ளையே மிரு­கத்தை சுடு­வ­து­போன்று குறி­பாத்து சுட்­ட­மையை எங்­க­ளால் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அந்­தப் போராட்­டத்­தில் பங்­கேற்ற மறை­மா­வட்ட ஆய­ரும் சுட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ளார்.
இவற்றை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. இவற்­றை­யெல்­லாம் கடந்­து­வந்­த­வர்­கள் நாங்­கள். போரா­டு­வ­தற்­குக் கார­ணம் டெல்லி அரசு. தமி­ழின மக்­களை ஒரு வன்­மு­றைக்­குள்­ளாக ஜன­நா­யக வழி­யில் போரா­டு­வதை நசுக்க இட­ம­ளிக்க கூடாது.” என்­றார்.
தொடர்ந்து தனது கண்­ட­னத்தை தெரி­வித்த சட்­டத்­த­ரணி சுகாஸ் “எங்­க­ளு­டைய தொப்­பிள்­கொடி உற­வு­கள் வாழு­கின்ற தமி­ழக மண்­ணிலே, தூத்­துக்­கு­டி­யில் அரங்­கே­றிய இந்­தத் தமி­ழி­னப் படு­கொ­லையை வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றோம். ஜன­நா­யக முறை­யில் அகிம்சை வழி­யிலே தங்­க­ளு­டைய கோரிக்­கையை முன்­வைத்த மக்­க­ளுக்கு துப்­பாக்கி ரவை­கள் பரி­சாக வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. சுத்­த­மான காற்­றுக்­கேட்­ட­வா்­க­ளுக்கு கிடைத்­ததோ துப்­பாக்கி குண்­டு­கள். உல­கின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக தேசம் என்று வா்ணிக்­கப்­ப­டு­கின்ற இந்­திய தேசத்­தில் இது நடந்­தே­றி­யி­ருக்­கி­றது. பாதிக்­கப்­பட்ட உற­வு­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டும். நீதி வழங்­க­வேண்­டும் என்று தமி­ழக மாநில அர­சை­யும் இந்­திய மைய அர­சை­யும் வேண்­டு­கி­றோம். நாங்­கள் கடந்த காலத்­தில் இனப்­ப­டு­கொ­லையை எதிர்­கொண்­ட­போது எங்­க­ளுக்­காக எங்­கள் தமி­ழக சகோ­த­ரர்­கள் தீக்­கு­ளித்­த­தை­யும் மறக்­க­வில்லை. எங்­கள் உற­வு­களே உங்­கள் துன்­பத்­தி­லும் உங்­கள் கவ­லை­யி­லும் உங்­க­ளுக்கு தோளோடு தோள் நிற்க்க நாங்­கள் தயா­ராக நிற்­கின்­றோம்” என்று சட்­டத்­த­ரணி சுகாஸ் தெரி­வித்­தார்.
“இந்­தப் படு­கொ­லையை வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றோம். போராட்­டத்தை ஒருங்­கி­ணைத்த ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் திட்­ட­மிட்­டுப் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். கல­வ­ரம் இன்றி திட்­ட­மிட்டு படு­கொலை இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. பொலி­ஸார் நடந்து கொண்ட விதத்தை பார்க்­கும்­போது இந்­தி­யா­வில் ஜன­நா­ய­கம் இருக்­கின்­றதா என்று கேட்­கத் தோன்­று­கி­றது” என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ண­ணி­யின் செய­லா­ளா் செ.கஜேந்­தி­ரன் தெரி­வித்­தார்.
தமிழ்­தே­சிய மக்­கள் முன்­ண­ணி­யின் செய­லா­ளா் செ.கஜேந்­தி­ரன், யாழ் மாந­க­ர­சபை உறுப்­பி­னா் வி.மணி­வண்­ணன், சட்­டத்­த­ரணி க.சுகாஸ், மதத்­த­லை­வா்­கள்,பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்­கள்,பொது­மக்­கள் எனப் பலர் கலந்­து­கொண்­ட­னர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.