சீரற்ற கால­நிலை உயி­ரி­ழப்பு – 20ஆக உயர்வு!

சீரற்ற கால­நிலை கார­ண­மாக இது­வ­ரை­யில் 20 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்
என்று இடர் முகா­மைத்­துவ நிலை­யம் தெரி­வித்­தது.
இரண்டு பேர் காணா­மல் போயுள்­ள­னர். 10 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். என்று அந்த நிலை­யம் நேற்று மதி­யம் தக­வல் வெளி­யிட்­டது.
தற்­போ­துள்ள மழை­யு­டன் கூடிய சீரற்ற கால­நிலை கார­ண­மாக 40ஆயி­ரத்து17 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்­சத்து 53 ஆயி­ரத்து 700 க்கும் அதி­க­மான பொது­மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.
அவர்­க­ளில் 14 ஆயி­ரத்து 437 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 55 ஆயி­ரத்து 553 பேர் 265 நலன்­புரி நிலை­யங்­க­ளில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.
இது­வ­ரை­யில் 105 வீடு­கள் முழு­மை­யா­கச் சேத­ம­டைந்­துள்­ளன. 4 ஆயி­ரத்து 708 வீடு­கள் பகு­தி­ய­ள­வில் சேத­ம­டைந்­துள்­ளன என்று அந்த நிலை­யம் மேலும் தெரி­வித்­தது.
Powered by Blogger.