வலி,வடக்கில் காணியை மீள வழங்க மில்லியன் இலஞ்சம் கேட்கும் இராணுவம்!

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 522 ஏக்கர் மக்களுக்கு சொந்தமா ன காணியை விடுவிப்பதற்காக சுமார் 866.71 மில்லியன் ரூபாய் நிதியை இராணுவத்திற்கு வழங்க நிதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கள் இணைந்து தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

வலிகாமம் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து 1990ம் ஆண்டு தொடக்கம் தங்கியிரு க்கும் இராணுவம் போருக்கு பின்னர் ஒரு தொகுதி மக்களுடைய நிலத்தை மக்களிடம் மீளவும் வழ ங்கியுள்ளது. மேலும் போருக்கு பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் படையினர்வசமிருந்த 4992 ஏக் கர் காணி மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து மக்களுக்கு சொந்தம hன சுமார் 522 ஏக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவதற்காக அந்த நிலங்களில் உள்ள படை யினரின் படைமுகாம்கள் மற்றும் தளபாடங்களை அகற்றுவதற்கான நிதியாக 866.71 மில்லியன் ரூபா யை இராணுவம் கேட்டுள்ளது.

அந்த நிதியை வழங்குவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்கள் அந்த அமைச்சரவை பத்திரத்தை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.