கட்­டுத்­துப்­பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

விலங்­கு­களை வேட்­டை­யாட வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத்­துப்­பாக்கி வெடித்து ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இந்­தச் சம்­ப­வம் வவு­னியா, தம்­ப­னை­யில் நேற்று நட­ந்­துள்­ளது. தம்­ப­னை­யைச் சேர்ந்த ரவிச்­சந்­தி­ரன் (வயது-–38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

 ரவிச்­சந்­தி­ர­னும், அவ­ரது நண்­ப­ரும் நேற்­றுக்­காலை வேட்­டைக்­குச் சென்­றுள்­ள­னர். அப்­போது அங்­கி­ருந்த கட்­டுத்­துப்­பாக்கி திடீ­ரென வெடித் துள்­ளது. இந்­தத் தக­வல் ரவிச்­சந்­தி­ர­னின் நண்­ப­ரால் ஊர் மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. ஊர் மக்­கள் உடலை மீட்டு வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர்.

 இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

No comments

Powered by Blogger.