இன்று முதல் புதிய பஸ் கட்டணங்கள்!

பஸ் கட்டண அதிகரிப்பு இன்று (23) முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நூற்றுக்கு 12.5 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இதனடிப்படையில் புதிய திருத்தங்களுக்கு அமைய குறைந்தபட்ச கட்டணமாக 12 ரூபாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களினதும், தனியார் பஸ்களினதும் கட்டண விபரங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.No comments

Powered by Blogger.