தலைமறைவாகிய விமானப் படை வீரர் கைது!

கடமையில் இருந்த வேளை ரீ 56 ரக துப்பாகி மற்றும் 90
இரவைகளுடன் தலைமறைவாகிய விமானப் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 திருகோணமலை சீனக்குடா காவல் துறை பிரிவிற்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் இவர் கடமையாற்றி வந்த நிலையில், நேற்று அதிகாலை இவ்வாறு தலைமறைவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் சீனக்குடா காவல்துறையின் தலையீட்டில் அவரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு  பெரியமடு பகுதியில் வைத்து நேற்று  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Powered by Blogger.