காவல் நிலையத்தினுள் 12 வயது சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்!

காவல்துறை பாதுகாப்பில் இருந்த 12 வயது சிறுவனை வெலிஓயா
காவல்துறை நிலையத்தில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் அதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து சந்கேத்திற்குரிய காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இது குறித்த வழங்கு கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 முல்லைத்தீவு உதவி காவற்துறை அத்தியட்சகருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் இனங்காண முடியாவிடின், வெலிஓயா காவல்துறையின் அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் அடையான அணிவகுப்புக்கு உற்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தவறும் பட்சத்தில் குறித்த முறைப்பாடு நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைக்கு எடுத்தக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என கெப்பத்திகொல்லாவ நீதவான் அறிவித்துள்ளார்.

 தகரங்களை திருடிய சம்பவம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி வெலிஓயா காவல்துறையால் இந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பின்னர் காவல்துறையில் தடுத்து வைத்திருந்த வேளை காவல்துறை அதிகாரியொருவரால் தான் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அந்த சிறுவன் கூறியுள்ளார்.

Powered by Blogger.