புதிய தொடரூந்து பாதைக்கான பணிகள் ஆரம்பம்!

குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக, ஹபரணைக்கான புதிய தொடரூந்து பாதைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 84 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த பாதை சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படுகின்றது.  வடக்கு, கிழக்கு மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துதல், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்கு உதவுதல், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல நன்மைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாதை அமைக்கப்படுகின்றது.

 நிர்மாணப் பணிகள் 2020ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.