காலைக்கதிர் பத்திரிக்கையின் செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

 காலைக்கதிர் பத்திரிக்கையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 யாழ்.ஊடகவியலாளர்களினால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுப்பட்டது .

 யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது முன்தினம் அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்து அதில் குறித்த செய்தியாளர் படுகாயமடைந்திருத்தார்.


Powered by Blogger.