பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பொலிஸ் மா அதிபர் புறக்கணித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடு செய்ய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசமைப்புச் சபைக்கும் இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகள் பல பொலிஸ் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட வில்லை. இதனால், தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாத ஒரு நிலமை ஏற்பட்டது என்று பொலிஸ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Powered by Blogger.