விஜேதாஸ மற்றும் ரவிக்கும் அமைச்சுப் பதவிகள்?

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக கடந்த நாட்களில் பேசப்பட்ட போதும் நேற்று (30) இரவு வரை எவ்வித இறுதித் தீர்மானமும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

புதிய அமைச்சரவை நியமனம் இன்று (01) காலை 10 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி செயகத்திற்கு வருகை தருமாறு அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது தற்போதிருக்கின்ற அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Powered by Blogger.