ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஷேட கூட்டம் இன்று!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஷேட கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது. 

இன்று மாலை 04.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தகட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது கூட்டம் இதுவாகும்.
Powered by Blogger.