வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம்!

“வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் பத்திரிகையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் பத்திரிகைகள் தாம் செல்லும் பாதையில் இருந்து 180 பாகை திரும்பி நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் தான் நீங்கள் சுதந்திரமாக நடக்க முடியும். பொய் சொல்வது பத்திரிக்கை சுதந்திரமல்ல. பொய் என தெரிந்தும் பொய்யினை கூறுவது சுதந்திரமில்லை.
நான் ஒரு போதும் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சொல்லவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவரசமாக எதிரி மாற்றம் தேவை என்றே நாங்கள் மேடை மேடையாக கூறினோம்” என தெரிவித்தார்.
Powered by Blogger.