பேஸ்புக்கில் மணமகன் தேடும் கேரள பெண்குட்டி!

தனக்கு ஏற்ற மணமகன் வேண்டும் என்று கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.
பேஸ்புக் எனப்படும் சமூகவலைதளத்தில் போட்டோ, வீடியோ, கருத்துகளை ஆகியவற்றை தங்கள் நண்பர்கள் வட்டாரத்துக்குள் பகிர்ந்து மகிழ்வர். பேஸ்புக்கை பொழுதுப்போக்குக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கேரள மாநிலத்து பெண் ஒருவர் பேஸ்புக்கில் தனக்கு ஏற்ற வரன் வேண்டும் என்று நண்பர்கள் நெட்வொர்க்கில் மலையாளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
மலப்புரத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர்தான் அத்தகைய விளம்பரத்தை கொடுத்துள்ளார். அதில் அவர் எனக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நண்பர்கள் வட்டாரத்தில் எனக்கேற்ற மணமகன் குறித்து யாருக்கேனும் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள்.

பதவில் என்ன

இத்துடன் அவர் தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஜாதக பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த பதிவை அவர் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியிட்டிருந்தார். இதை 6000 பேர் ஷேர் செய்துள்ளனர்.

ஏப்ரலில் போஸ்ட்

இத்துடன் அவர் தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஜாதக பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த பதிவை அவர் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியிட்டிருந்தார். இதை 6000 பேர் ஷேர் செய்துள்ளனர்.

முக்கிய நெட்வொர்க்

இவரது பதிவை பார்த்த ஏராளமானோர் இவருக்கு திருமண ப்ரபோஸல் செய்துள்ளனர். இத்துடன் நின்றுவிடாமல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது #FacebookMatrimony என்பதை பேஸ்புக்கின் முக்கிய நெட்வொர்க்கில் இணைக்குமாறு கேட்டுள்ளார்.

நண்பர்களுக்கு கோரிக்கை

பேஸ்புக் மூலம் வரன் தேடும் போது ஜாதி, ஜாதகம் ஆகியவற்றிலிருந்து வெளியே வருவர் என்பது தன்னால் உறுதியாக கூறமுடியும் என்றும் பேஸ்புக் நண்பர்களும் பேஸ்புக் மேட்ரிமோனியல் சைட் குறித்து ஜூக்கர்பெர்க்கிற்கு எழுதுங்கள் என்று ஜோதி கூறியுள்ளார்.
Powered by Blogger.