பெண்களுக்கான வலுவூட்டலும் தற்பாதுகாப்பு பயிற்சியும் "

வட்டுக்கோட்டை உதயவாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன்  இணைப்பாளரும் ஒளியரசி சஞ்சிகையின் உதவி ஆசிரியருமாகிய திருமதி.சிவரூபன் சூரியா அவர்களின் ஒழுங்கமைப்பில் சரவணபவன் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து "பெண்களுக்கான வலுவூட்டலும் தற்பாதுகாப்பு பயிற்சியும் " நிகழ்வு 12.05.2018 அன்று வலிமேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
         நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஈ. சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
 வலிமேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் திரு.நடனேந்திரன்  மகளீர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி துளசி,சரவணபவன் அறக்கட்டளை செயலாளர் திரு. பிரதாப்
 சுயாதீன ஊடகவியலாளர் S.K. லதா ஆகியோருடன்  ஆசிரியர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்பிள்ளைகளும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் வளவாளர்களாக வசந்தம் அறக்கட்டளையை சேர்ந்த மகளிர் பங்கு பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
பயிற்சி முடிவில் சான்றிதழ்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களால் வழங்கப்பட்டது.Powered by Blogger.