முள்ளிவாய்க்கால் கஞ்சி..!

உயிரைப்பிடித்து வைத்த உன்னத கஞ்சியே..
உனை மறப்பதெப்படி..!
சிலவேளைகளில் நீயும் உயிரைப்பறித்தாய்..
வரிசையில் எறிகணை வீழ்ந்து பல
உயிர்களைக் பறித்ததே..!

மே_18

மீண்டிட முடியாத்துயரங்கள்...!
மறந்திட முடியாக் கொடூரங்கள்..!
எத்தனை வதைகள் கண்டோம்?
எத்தனை வலிகள் கொண்டோம்? 

தொலைக்கப்பட்ட எம் உறவுகளின் உயிர்த்தேடல் 

இன்னும் ஓய்ந்திடவில்லை...!
இத்தனையும் கடந்து வந்தும்
மனிதம் தொலைத்த மனிதர்களாய்...!
இன்னும் மனித மனங்கள் மாறிடவில்லை ஏனோ....??


-ஜெயம் நிலா- 
Powered by Blogger.