கருணைக்கொலைக்கு பிரதமருக்கு கடிதம் எழுதிய பெண்மணி!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஊனமுற்ற
பெண்மணி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக குறித்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த ஊனமுற்ற பெண்மணியின் தந்தை இறந்த பின்னர் இதுவரை அவருக்கான ஓய்வூதிய தொகை கிடைக்கப்பெறவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

போதிய வருவாய் இல்லாத நிலையில், இன்னும் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்ற காரணத்தால் தம்மை கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மிகவும் ஊனமுற்ற நோயாளிகளுக்கு அவர்களின் கோரிக்கையை ஆராய்ந்து கருணைக்கொலைக்கு அனுமதி அளிக்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.